ஏர் இந்தியா ஒன்-பி777 என்ற விமானத்தில் முதல் பயணத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பயணித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி பயணம் செய்வதற்காக ‘ஏர்போர்ஸ் ஒன்’ என்ற அதிநவீன வசதிகள் நிறைந்த விமானம் உள்ளது. அதுபோல், இந்திய ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் போன்ற மிக மிக முக்கிய பிரமுகர்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பயணிப்பதற்காக ‘ஏர் இந்தியா ஒன்-பி777’ என்ற விமானம் வாங்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் நேற்று முதல் முறையாக இயக்கப்பட்டது. அதன் முதல் பயணத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பயணித்தார். அவர் திருப்பதி செல்லும் வழியில் சென்னைக்கு இந்த விமானத்தில் வந்தார். விமானிகளையும், சிப்பந்திகளையும் அவர் பாராட்டியதாக ஜனாதிபதி மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.