செய்திகள்
நரேந்திரமோடி (கோப்பு படம்)

’நிவர் புயல் சூழல் குறித்து தமிழக முதல்வருடன் பேசினேன்’ - பிரதமர் மோடி தமிழில் டுவீட்

Published On 2020-11-24 08:36 GMT   |   Update On 2020-11-24 08:36 GMT
நிவர் புயல் சூழல் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன் பேசியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

புயல் பாதிப்பை சமாளிக்க தமிழக, புதுச்சேரி அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில், புயல் பாதிப்பு நிலவரம் தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ’நிவர் புயல் சூழல் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உடன் பேசினேன். 

மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதி அளித்தேன். பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக நான் பிரார்த்திக்கிறேன்’ என்றார்.


Tags:    

Similar News