செய்திகள்
பிரதமர் மோடி

மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

Published On 2020-11-23 21:56 GMT   |   Update On 2020-11-23 21:56 GMT
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து சில மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
புதுடெல்லி:

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுகுறித்துமாநிலங்களுக்கு பல்வேறு உதவிகளும் வழங்கி வருகிறது.

குறிப்பாக, கொரோனாவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி அடிக்கடி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டங்களில் மாநிலங்களின் கொரோனா நிலவரம் குறித்து கேட்டறியும் அவர், அவற்றில் இருந்து மக்களை மீட்பதற்கான வழிமுறைகளையும் மாநிலங்களுக்கு வழங்கி வருகிறார்.

இந்நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களின் முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று மெய்நிகர் முறையில் ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது. 

இன்று காலை 10 மணி அளவில் நடக்க உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். அப்போது தமிழகத்துக்கு தேவையான கோரிக்கைகளை பிரதமரிடம் அவர் எடுத்துரைப்பார்.

இந்த கூட்டத்தில் கொரோனா தொற்றின் தற்போதைய நிலை, அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தயார் நிலை, கொரோனா மேலாண்மை ஆகியவை பற்றி ஆலோசிக்கப்படுகிறது.
Tags:    

Similar News