செய்திகள்
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள்

மொத்த பாதிப்பு 91.39 லட்சம், குணமடைந்தவர்கள் 85.62 லட்சம்... இந்தியா கொரோனா அப்டேட்ஸ்

Published On 2020-11-23 04:14 GMT   |   Update On 2020-11-23 04:14 GMT
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 91.39 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், 4.43 லட்சம் பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த நிலையில், தற்போது 40 ஆயிரத்தை கடந்துள்ளது. டெல்லியில் மூன்றாவது அலை பரவத் தொடங்கி உள்ளது. அதேசமயம், நாடு முழுவதும் குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 
 
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 91 லட்சத்தை தாண்டி உள்ளது. மொத்த பாதிப்பு 91,39,866 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 44,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 511 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,33,738 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 85,62,642 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 41,024 பேர் குணமடைந்துள்ளனர். 

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,43,486 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.46 சதவீதமாகவும், குணமடையும் விகிதம் 93.68 சதவீதமாகவும் உள்ளது.
Tags:    

Similar News