செய்திகள்
சிவராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேசத்தில் பசுக்களின் நலன்களுக்காக கோமாதா வரி விதிக்க திட்டம்

Published On 2020-11-22 23:27 GMT   |   Update On 2020-11-22 23:27 GMT
மத்திய பிரதேசத்தில் பசுவின் நலனுக்காக பணம் திரட்டுவதற்காக கோமாதா வரி விதிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
போபல்:

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பசுக்களைப் பாதுகாக்கவும், பசுக்களின் மேம்பாட்டுக்காகவும் பசு நல அமைச்சகம் அமைக்க முடிவு செய்துள்ளதாக முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார்.

இந்த நிலையில் பசுவின் நலனுக்காக பணம் திரட்டுவதற்காக கோமாதா வரி விதிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “பசுக்கள் நலனுக்காகவும், மாட்டுக்கொட்டகைகளின் பராமரிப்புக்காக பணம் திரட்டுவதற்கும் சில சிறிய வரி விதிக்க நான் யோசிக்கிறேன். நம் இந்திய கலாசாரத்தில் விலங்குகளுக்கான அக்கறை இப்போது மறைந்து வருகிறது. எனவே மாடுகளுக்காக பொதுமக்களிடம் இருந்து கோமாதா வரியை வசூலிக்க யோசித்து வருகிறோம்” என்றார்.
Tags:    

Similar News