செய்திகள்
பிரதமர் மோடி

கொரோனா பரவல் எதிரொலி - முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

Published On 2020-11-22 22:19 GMT   |   Update On 2020-11-22 22:19 GMT
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
புதுடெல்லலி:

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுகுறித்துமாநிலங்களுக்கு பல்வேறு உதவிகளும் வழங்கி வருகிறது.

குறிப்பாக, கொரோனாவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி அடிக்கடி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டங்களில் மாநிலங்களின் கொரோனா நிலவரம் குறித்து கேட்டறியும் அவர், அவற்றில் இருந்து மக்களை மீட்பதற்கான வழிமுறைகளையும் மாநிலங்களுக்கு வழங்கி வருகிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன்  நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் மெய்நிகர் முறையில் ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது. 

மேலும் தடுப்பூசி வினியோகிக்கும் திட்டம் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News