செய்திகள்
பசு அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் சவுகான்

மத்திய பிரதேசத்தில் பசு அமைச்சரவை முதல் கூட்டம்... பசுக்களை பாதுகாக்க வியூகம்

Published On 2020-11-22 09:21 GMT   |   Update On 2020-11-22 09:33 GMT
மத்திய பிரதேச மாநிலத்தில் பசுக்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள தனி அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது.
போபால்:

மத்திய பிரதேச மாநிலத்தில் பசுக்களின் பாதுகாப்பிற்காக தனி அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சகத்தில், 5 அமைச்சர்கள், 6 துறைகள் இடம்பெற்றுள்ளன. 

கோபாஷ்டமி தினமான நவம்பர் 22ம் தேதி, பசு அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியிருந்தார். அதன்படி இன்று பசு அமைச்சரவையின் முதல் கூட்டத்தை காணொளி வாயிலாக முதல்வர் நடத்தினார். 

இதில் பசு அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் பசு பராமரிப்பு வல்லுநர்கள் பங்கேற்றனர். அப்போது பசு பாதுகாப்பு குறித்த விரிவான திட்டங்களை வகுத்து பணிகளை தொடங்கும்படி முதல்வர் அறிவுறுத்தினார். பசு பாதுகாப்பு நல வரி தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் பேசிய அவர், ‘விலங்குகள் தொடர்பான துறைகளின் அமைச்சர்கள் மற்றும் முதன்மை செயலாளர் இணைந்து குழுவை உருவாக்கி பசு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பாக பணியாற்றுவார்கள். இந்த விவகாரத்தை கால்நடை வளர்ப்பு துறையால் மட்டுமே கையாள முடியாது’ என்றார்.
Tags:    

Similar News