செய்திகள்
பிரதமர் மோடி

கொரோனா தடுப்பூசி விவகாரம்: நிபுணர் குழுவுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

Published On 2020-11-20 18:27 GMT   |   Update On 2020-11-20 18:27 GMT
கொரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பாக நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தியதாக பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு குறையத்தொடங்கினாலும், 2-வது அலை பரவி மீண்டும் தொற்று பாதிப்பு உச்சத்தை எட்டிவிடுமோ? என்பது மக்களின் அச்சமாக உள்ளது. எனவே, கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். 

உலகம் முழுக்க கொரோனா தடுப்பூசிக்கான சோதனை நடந்து வருகிறது. பைசர், மாடர்னா, பாரத் பயோ டெக் உள்ளிட்ட பல நிறுவனங்கள் உலகம் முழுக்க ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. பைசர், மாடர்னா நிறுவனங்கள் தங்கள் கொரோனா சோதனையை வெற்றிகரமாக முடித்துவிட்டு, ஒப்புதல் பெறுவதற்காக திட்டமிட்டுள்ளது. 

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பாக பிரதமர் மோடி இன்று நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். நிதி ஆயோக், மருத்துவ குழு, தடுப்பூசி ஆராய்ச்சி குழு என்று பல்வேறு குழுவுடன் மோடி ஆலோசனை செய்தார். 

இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:- இன்று கொரோனா தடுப்பூசி தொடர்பாக திட்டமிடுவதற்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டேன். தடுப்பூசி உற்பத்தி, அனுமதி, கொள்முதல் குறித்து ஆலோசனை செய்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News