செய்திகள்
ரூபே கார்டு திட்டத்தை அறிமுகம் செய்த பிரதமர் மோடி

பூட்டானில் 2ம் கட்ட ரூபே கார்டு திட்டத்தை அறிமுகம் செய்தார் மோடி

Published On 2020-11-20 06:54 GMT   |   Update On 2020-11-20 06:54 GMT
தொற்றுநோயிலிருந்து இந்தியா வலுவாக மீண்டு வரும் என்று தான் நம்புவதாக பூட்டான் பிரதமர் லோட்டே ஷெரிங் தெரிவித்தார்.
புதுடெல்லி:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அண்டை நாடான பூட்டானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அங்கு இந்தியாவின் பணப் பரிவர்த்தனை அட்டையான ரூபே கார்டை அறிமுகப்படுத்தினார். தற்போது 2ம் கட்ட ரூபே கார்டு திட்டத்தை பிரதமர் மோடியும், பூட்டான் பிரதமர் லோட்டே ஷெரிங்கும் இன்று காணொளி வாயிலாக அறிமுகம் செய்தனர். 

இந்நிகழ்ச்சியில் பூட்டான் பிரதமர் பேசியதாவது:-

கொரோனா தடுப்பூசி மருத்துவ பயன்பாட்டிற்கு தயாரானவுடன், பூட்டானுக்கு தடுப்பூசி கிடைக்கும் என உறுதி அளித்தமைக்காக தங்களுக்கும் (மோடி) தங்கள் அரசாங்கத்திற்கும் நன்றி. தொற்றுநோயைக் கையாள்வதில் பிரதமர் மோடியின் தலைமை மிகவும் பாராட்டத்தக்கது.

தொற்றுநோயிலிருந்து இந்தியா மிகவும் வலுவாக மீண்டு வரும் என்று நான் நம்புகிறேன். தடுப்பூசிகளை மேம்படுத்துவதில் இந்தியா எடுக்கும் முயற்சிகள், நம் அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News