செய்திகள்
பிசி பட்டீல்

கட்சி மாறிய 17 பேரை எடியூரப்பா மரியாதையுடன் நடத்துகிறார்: மந்திரி பி.சி.பட்டீல்

Published On 2020-11-20 02:04 GMT   |   Update On 2020-11-20 02:39 GMT
காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளில் இருந்து விலகி பா.ஜனதாவுக்கு வந்த 17 பேரை முதல்-மந்திரி எடியூரப்பா நல்ல முறையில் மரியாதையுடன் நடத்துகிறார் என்று கர்நாடக விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் கூறியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் ஒசப்பேட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளில் இருந்து விலகி பா.ஜனதாவுக்கு வந்த 17 பேரை முதல்-மந்திரி எடியூரப்பா நல்ல முறையில் மரியாதையுடன் நடத்துகிறார். அதே போல் எங்கள் கட்சியின் மற்ற மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களையும் உரிய மரியாதையுடன் நடத்துகிறார். யார்-யாருக்கு என்ன பதவி வழங்க வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். எங்களிடையே யாருக்கும் அதிருப்தி கிடையாது. அனைவரும் சகோதரர்களை போல் இருக்கிறோம்.

முதல்-மந்திரி மற்றும் எங்கள் கட்சியின் மாநில தலைவரை எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு பணிகளுக்காக சந்திக்கிறார்கள். தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கிறார்கள். அவர்கள் யாரும் மந்திரி பதவி வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கவில்லை. மந்திரி பதவிக்காக தான் முதல்-மந்திரியை எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பதாக கூறுவது தவறு.

இவ்வாறு மந்திரி பி.சி.பட்டீல் கூறினார்.
Tags:    

Similar News