கொரோனா தடுப்பு முன்களப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு மருத்துவப் படிப்புகளில் உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
கொரோனா தடுப்பு பணியின்போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு
பதிவு: நவம்பர் 19, 2020 16:10
கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர்கள்
புதுடெல்லி:
மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தடுப்பு முன்களப் பணியின்போது உயிரிழந்தவர்களின் தியாகத்தை கவுரவிக்கும் வகையில் மருத்துவக் கல்வியில் உள்ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய தொகுப்பில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் இந்த உள்ஒதுக்கீடு வழங்கப்படும்.
தன்னலமின்றி கொரோனா தடுப்பு முன்களப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் வாரிசுகள் இந்த உள்ஒதுக்கீட்டின் மூலம் பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.