செய்திகள்
வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர்

மேல்முறையீட்டு மனு : வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2020-11-19 02:27 GMT   |   Update On 2020-11-19 02:27 GMT
ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு தொடர்பாக பதில் அளிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு உத்தரவிட்டனர்.
புதுடெல்லி:

வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர், ஜூகல்சின் மாதூர்ஜி உள்ளிட்டோர் ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்தும், தேர்தல் ஆணைய அறிவிக்கைக்கு எதிராகவும் காங்கிரஸ் தலைவர்கள் கவுரவ் பாண்டியா, சந்திரிகா பென், பரேஷ்குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை குஜராத் ஐகோர்ட்டு கடந்த பிப்ரவரி 4-ந்தேதி தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், குஜராத் ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக கவுரவ் பாண்டியா உள்ளிட்டோர் தாக்கல்செய்த மேல்முறையீட்டு மனு, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

கவுரவ் பாண்டியா சார்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் ஆஜராகி, இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்த தேதி குறிக்க வேண்டும் என வாதிட்டார்.

அவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு தொடர்பாக பதில் அளிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு உத்தரவிட்டனர்.

அப்போது ஜெய்சங்கர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஹரீஷ் சால்வே, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
Tags:    

Similar News