செய்திகள்
வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர்

ஜோ பைடன் இந்தியாவுக்கு அந்நியர் அல்ல - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

Published On 2020-11-17 20:17 GMT   |   Update On 2020-11-17 20:17 GMT
அதிபர் தேர்தலில் வென்றுள்ள ஜோ பைடன் இந்தியாவுக்கு அந்ந்தியர் அல்ல என்பதால், இந்தியா - அமெரிக்க உறவு வளர்ச்சியை நோக்கியே இருக்கும் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
புதுடெல்லி:

சர்வதேச ஆளுமை கண்டுபிடிப்பு மையம் மற்றும் கேட்வே ஹவுஸ் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆன்லைன் கலந்துரையாடலில் வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: 

அதிபர் தேர்தலில் வென்றுள்ள ஜோ பைடன் இந்தியாவுக்கு அந்ந்தியர் அல்ல என்பதால், இந்தியா - அமெரிக்க உறவு வளர்ச்சியை நோக்கியே இருக்கும். ஜோ பிடன் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவுடன் உறவுகளை முன்னெடுப்பதில் இந்திய அரசு எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ளாது.

பராக் ஒபாமா நிர்வாகத்தில் துணைத் தலைவராகவும், செனட் வெளியுறவுக் குழு தலைவராகவும் இருந்த ஜோ பைடனின் முன்னாள் பாத்திரங்களில் இந்தியாவுடனான உறவு சிறப்பாகவே இருந்துள்ளது.

அமெரிக்காவின் கிளிண்டன், ஜார்ஜ் டபிள்யூ புஷ், பராக் ஒபாமா மற்றும் டொனால்ட் டிரம்ப் என நான்கு அதிபர்களும் இந்தியாவுடனான நட்புறவுக்கு எப்போதும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News