செய்திகள்
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

குறைந்த விலை கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவை எதிர்நோக்கும் உலகம்: ஜெய்சங்கர்

Published On 2020-11-17 13:02 GMT   |   Update On 2020-11-17 13:32 GMT
குறைந்த விலை கொரோனா தடுப்பூசிக்கு உலகமே இந்தியாவை எதிர்பார்த்து கொண்டிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன.

அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி 94.5 சதவீதம் பயன் உள்ளதாகவும், மற்றொரு அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபிப்சர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி 90 சதவீதம் பாதுகாப்பாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனை நிலையில் உள்ளன.

இந்நிலையில் இந்தியாவின் குறைந்த விலை கொரோனா தடுப்பூசியை உலகமே எதிர்பார்த்து கொண்டிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி தொடர்பாக பிரதமர் மோடியும் ஐக்கிய நாடுகள் சபையில் உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். உலகம் இக்கட்டான சூழலில் இருக்கும்போது அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதில் இந்தியா முன்னிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி உருவாக்கும் சர்வதேச முயற்சிகளின் மையப்புள்ளியில் இந்தியா இருப்பதாகவும் அவர் கூறினார்.
Tags:    

Similar News