செய்திகள்
பட்டாசு

பெங்களூருவில் பட்டாசு வெடிக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை

Published On 2020-11-16 02:04 GMT   |   Update On 2020-11-16 02:04 GMT
தீபாவளியையொட்டி பெங்களூருவில் பட்டாசு வெடிக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை என்று தெரியவந்துள்ளது. இதன் காரணமாக காற்று மாசுவும் குறைந்துள்ளதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பெங்களூரு

தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு தான் முதல் இடம் பிடிக்கிறது. கர்நாடகத்தில் 3 நாட்கள் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. பட்டாசு வெடிப்பவர்களில் சிலரின் கண்கள் பாதிக்கப்படுவது உண்டு. இதனால் பெங்களூருவில் 100-க்கும் மேற்பட்டவர்களின் கண்கள் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டுவிடும். அவர்கள் கண் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்து சிகிச்சை பெறுவது வழக்கம்.

இந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, தீபாவளியின்போது பட்டாசு விற்கவும், வெடிக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல் நாளான நேற்று முன்தினம், பட்டாசு வெடித்ததால் கண்களிலோ அல்லது கைகளிலோ காயம் ஏற்பட்டதாக யாரும் பெங்களூருவில் உள்ள கண் மருத்துவமனைக்கு வரவில்லை. ஆனால் நேற்று மட்டும் பட்டாசு வெடித்து காயம் ஏற்பட்டதாக 16 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அரசு விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகளால் பட்டாசு விற்பனையும் குறைந்துவிட்டது. பட்டாசு வெடிக்கவும் மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. இதனால் நேற்று முன்தினம் பெங்களூருவில் பட்டாசு வெடி சத்தம் குறைவாக காணப்பட்டது. இதன் காரணமாக காற்று மாசுவும் குறைந்துள்ளதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Tags:    

Similar News