செய்திகள்
பட்டாசு வெடிக்க அனுமதி

தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி - திருவனந்தபுரம் கலெக்டர் அறிவிப்பு

Published On 2020-11-12 20:16 GMT   |   Update On 2020-11-12 20:16 GMT
தீபாவளி பண்டிகையையொட்டி திருவனந்தபுரத்தில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் நவ்ஜோத் கோசா அறிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:

கொரோனா பரவலைத் தொடர்ந்து நாடு முழுவதும் தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்க பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தலைநகர் டெல்லி, ராஜஸ்தான் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதற்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காலையிலும், இரவிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என அம்மாவட்ட கலெக்டர் நவ்ஜோத் கோசா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் நவ்ஜோத் கோசா வெளியிட்டுள்ள அறிக்கையில், காற்று மாசுபடுவதைத் தடுக்கும் வகையில் பட்டாசு விற்பனையாளர்கள் பசுமை பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். தீபாவளியை முன்னிட்டு பொது மக்கள் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். 

தீபாவளி தவிர, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திலும் பட்டாசு வெடிக்கக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி இரவு 11.55 முதல் 12.30 மணி வரை 35 நிமிடங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News