செய்திகள்
நிதித் துறை மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய கலாசார துறை மந்திரியிடம் ஒப்படைத்தக்காட்சி

பல்வேறு சமயங்களில் கைப்பற்றப்பட்ட தொன்மை பொருட்கள் கலாசார அமைச்சகத்திடம் ஒப்படைப்பு

Published On 2020-11-11 23:44 GMT   |   Update On 2020-11-11 23:44 GMT
பல்வேறு சமயங்களில் கைப்பற்றப்பட்ட பழங்கால நாணயங்கள் உள்பட தொல் பொருட்களை நிதித் துறை மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய கலாசார துறை மந்திரியிடம் ஒப்படைத்தார்.
புதுடெல்லி:


கடந்த 1994-ம் ஆண்டு ஜூன் 21-ந் தேதி, ஹாங்காங் சென்ற 2 வெளிநாட்டவர்களிடம் இருந்து 2 ஒட்டியாணங்கள் சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோல தேடுதல் வேட்டையில் ஒரு வீட்டில் இருந்து பழங்கால நாணயங்கள் உள்ளிட்ட கலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இப்படி கையகப்படுத்தப்பட்ட 40 ஆயிரத்து 282 பழங்கால நாணயங்கள் உள்பட 40 ஆயிரத்து 301 தொல் பொருட்கள் மத்திய நிதித்துறை வசம் இருந்தது. இவற்றை நிதித் துறை மந்திரி நிர்மலா சீதாராமன், நேற்று மத்திய கலாசார துறை மந்திரி பிரஹலாத் சிங் படேலிடம் ஒப்படைத்தார். இந்த தொல்பொருட்களின் மதிப்பு 63.90 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News