செய்திகள்
கோப்புப்படம்

கப்பல் அமைச்சகம் பெயர் மாற்றம் - அமைச்சரவை செயலகம் தகவல்

Published On 2020-11-11 23:33 GMT   |   Update On 2020-11-11 23:33 GMT
மத்திய கப்பல் அமைச்சகம் இனிமேல் துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் என மறுபெயரிடப்பட்டு அழைக்கப்படும்.
புதுடெல்லி:

மத்திய கப்பல் துறை அமைச்சகம் மாற்றி அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். அதன்படி மத்திய கப்பல் அமைச்சகம் இனிமேல் துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் என மறுபெயரிடப்பட்டு அழைக்கப்படும். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்ட இந்த உத்தரவை அமைச்சரவை செயலகம் வெளியிட்டது.

கடல்சார் கப்பல் மற்றும் பயணங்கள், கடல் வணிகம், ஏற்றுமதி, இறக்குமதி, சரக்கு போக்குவரத்து, பயணிகள் போக்குவரத்து, தேசிய நீர்வழி போக்குவரத்து, கலங்கரை விளக்கங்கள், தீவுகள் போன்ற நிர்வாகம் இந்த அமைச்சகத்தின் கீழ் இருக்கும்.

கப்பல் கட்டுதல், கப்பல் பழுதுபார்த்தல், கப்பல் உடைத்தல், மீன்பிடி கப்பல் தொழில், மிதக்கும் கைவினைத் தொழில் ஆகியவையும் துறைமுக அறக்கட்டளைகள், நீர்வழி ஆணையம், இந்திய கப்பல்கழகம் போன்ற தன்னாட்சி அமைப்புகளும் இந்த அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News