செய்திகள்
பட்டாசு

தீபாவளி கொண்டாட்டத்தில் மும்பையில் பட்டாசு வெடிக்க தடை

Published On 2020-11-09 22:35 GMT   |   Update On 2020-11-09 22:35 GMT
மும்பையில் தீபாவளி கொண்டாட்டத்தில் சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை:

மும்பையை பொறுத்தவரை தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி தொடங்கி 16-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதில் வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) லட்சுமி பூஜை தினத்தன்று மட்டும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை கட்டுப்பாடுகளுடன் பட்டாசு வெடிக்க மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது.

அதில் மத்தாப்பூ, புஸ்வானம், சங்கு சக்கரம் போன்ற பட்டாசுகளை வெடிக்க மட்டும் பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல தீபாவளி பண்டிகையின் போது ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், ஜிம்கானாக்கள் போன்ற பகுதிகளில் வானவேடிக்கை நிகழ்த்தவும் மாநகராட்சி தடைவிதித்து.
Tags:    

Similar News