செய்திகள்
சோனியா - மெகபூபா

மெகபூபா முப்தியின் கட்சியில் இருந்து ராஜினாமா செய்த 3 தலைவர்களும் காங்கிரசில் இணைந்தனர்

Published On 2020-11-09 11:21 GMT   |   Update On 2020-11-09 11:21 GMT
மெகபூபா முப்தியின் சில பேச்சுக்கள் தேசப்பற்று உணர்வை புண்படுத்துவதாக கூறி மக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து 3 தலைவர்கள் ராஜினாமா செய்திருந்தனர்.
ஸ்ரீநகர்:

காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரியும் ஜம்முகாஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவருமான மெகபூபா முப்தி கடந்த மாதம் 23-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்தார். 

அந்த சந்திப்பின் போது, ஜம்மு காஷ்மீர் கொடி எப்போது வருகிறதோ அப்போதுதான் இந்திய தேசியக்கொடியை ஏற்றுவோம் என கூறி சர்ச்சையை கிளப்பினர்.

மெகபூபா முப்தியின் பேச்சுக்கு காங்கிரஸ், பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பல்வேறு தரப்பினரும் மெகபூபாவுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, கடந்த 26-ம் தேதி மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து டிஎஸ் பாஜ்வா, வேத் மகாஜன் மற்றும் ஹசன் ஏ வாஃபா ஆகிய 3 தலைவர்கள் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

பிடிபி தலைவர் மெகபூபா முப்தியின் சில செயல்கள் மற்றும் விரும்பத்தகாத பேச்சுக்கள் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியதாவும், குறிப்பாக தேசப்பக்தி உணர்வை புண்படுத்தும் வகையில் இருந்ததாலும் கட்சியில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பிடிபி கட்சியில் இருந்து விலகிய டிஎஸ் பாஜ்வா, வேத் மகாஜன் மற்றும் ஹசன் ஏ வாஃபா ஆகிய 3 பேரும் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டனர். இந்த தகவலை பிடிபி-யில் இருந்து பிரிந்து காங்கிரசில் இணைந்த வேத் மகாஜன் உறுதிபடுத்தியுள்ளார்.
Tags:    

Similar News