செய்திகள்
ஸ்வப்னா சுரேஷ்

சிறையில் உள்ள ஸ்வப்னா சுரேசிடம் மீண்டும் விசாரணை -அமலாக்கத் துறைக்கு கோர்ட் அனுமதி

Published On 2020-11-09 10:25 GMT   |   Update On 2020-11-09 10:25 GMT
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேசிடம் மீண்டும் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு கோர்ட் அனுமதி வழங்கி உள்ளது.
கொச்சி:

கேரள மாநிலத்தை உலுக்கிய தங்கக் கடத்தல் தொடர்பாக தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக என்ஐஏ, அமலாக்கத்துறை மற்றும் சுங்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. 

இந்நிலையில், சிவசங்கர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஸ்வப்னா சுரேஷிடம் மீண்டும் விசாரணை நடத்தி கூடுதல் தகவல்களை பெறுவதற்கு அமலாக்கத்துறை முடிவு செய்தது. இதற்காக கொச்சியில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று பரிசீலனை செய்த நீதிமன்றம், சிறையில் இருக்கும் ஸ்வப்னா சுரேசிடம் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் விசாரணை நடத்த அனுமதி அளித்தது. 

அதன்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் நாளை காலை சிறைக்கு சென்று, ஸ்வப்னா சுரேசிடம் விசாரணையை தொடங்க உள்ளனர்.
Tags:    

Similar News