மத்திய பிரதேசத்தில் டிப்பர் லாரியும் காரும் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
லாரி- கார் நேருக்கு நேர் மோதல்: 7 பேர் உயிரிழப்பு
பதிவு: நவம்பர் 09, 2020 10:59
சாலை விபத்து
சத்னா:
மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் டிப்பர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் முற்றிலும் நொறுங்கியது. காருக்குள் இருந்தவர்கள் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் உயிருக்குப் போராடினர். விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த கோர விபத்தில், 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு ரேவாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Related Tags :