செய்திகள்
பட்டாசு

அரியானாவில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் அனுமதி

Published On 2020-11-08 19:51 GMT   |   Update On 2020-11-08 19:51 GMT
தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிப்பதாக அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.
சண்டிகர்:

பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபாடு ஏற்பட்டு, அதன் மூலம் கொரோனா தொற்று பரவும் வாய்ப்பு உள்ளதாக கூறி பல மாநிலங்கள் பட்டாசு வெடிக்க தடை விதித்து வருகின்றன. அந்தவகையில் அரியானா மாநில அரசும், பட்டாசு விற்பனைக்கு கடந்த 6-ந்தேதி முழு தடை விதித்தது.

இதன் தொடர்ச்சியாக பட்டாசு வெடிக்கும் விவகாரத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டது. அதன்படி தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிப்பதாக முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தெரிவித்தார். காற்று மாசுபாட்டை தடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

காற்று மாசுபாடு மற்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News