செய்திகள்
ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த செயற்கைக்கோள்

இந்தியாவின் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

Published On 2020-11-07 10:23 GMT   |   Update On 2020-11-07 10:23 GMT
பி.எஸ்.எல்.வி. சி-49 ரக ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட இந்தியாவின் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்ளிட்ட அனைத்து செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.
சென்னை:

ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்ணில் ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-49 ரக ராக்கெட் இன்று பிற்பகல் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த ஆண்டில் இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்பட்ட முதல் ராக்கெட் இதுவாகும். 

பூமி கண்காணிப்பு பணிக்காக இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் மற்றும்  வணிக ரீதியிலான 9 பன்னாட்டு செயற்கைகோள்கள் இந்த ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டன.

பின்னர் ராக்கெட்டில் இருந்து செயற்கைக் கோள்கள் அனைத்தும் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன. பின்பு செயற்கைக் கோள்கள் அவற்றுக்கான சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டன. இந்த நிகழ்வை சதீஷ்தவான் விண்ணில் ஆய்வு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் கண்காணித்தனர். 

செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதால் அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர். இந்த திட்டத்தில் பங்கேற்ற அனைத்து விஞ்ஞானிகளுக்கும் இஸ்ரோ தலைவர் சிவன் நன்றி தெரிவித்தார். 
Tags:    

Similar News