நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
கமல் ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கேரள முதல்வர்
பதிவு: நவம்பர் 07, 2020 12:24
கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் கமல் (கோப்பு படம்)
திருவனந்தபுரம்:
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது 66-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். கமல்ஹாசனுக்கு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்கும்படி கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.
கமல்ஹாசனுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்புள்ள கமல்ஹாசன் அவர்களுக்கு எனது கனிவான வாழ்த்துகள். அவருடைய பிறந்த நாள் மற்றும் இந்தாண்டு சிறப்பாக அமைய இருக்க வாழ்த்துகள்“ என்றுள்ளார்.
Related Tags :