செய்திகள்
பட்டாசு

கொரோனாவை காரணம் காட்டி பட்டாசு வெடிக்க தடை விதித்தது கர்நாடகம்

Published On 2020-11-06 09:49 GMT   |   Update On 2020-11-06 09:49 GMT
பட்டாசுகளுக்கு தடை விதித்த மாநிலங்கள் வரிசையில் பாஜக ஆளும் கர்நாடகமும் இணைந்துள்ளது.
பெங்களூரு:

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் காற்று மாசு அதிகரிப்பு காரணமாக பட்டாசுகளுக்கு தடை விதித்து டெல்லி, ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்கள் உத்தரவிட்டுள்ளன. அந்த வரிசையில் பாஜக ஆளும் கர்நாடகமும் இணைந்துள்ளது. கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பட்டாசுகள் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் நேற்று கூறியிருந்தார். தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், கொரோனா தொற்று காரணமாக பட்டாசு வெடிக்க தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார். இந்த தீபாவளியில் பட்டாசுகளை தடை செய்வதற்கான முடிவை எடுத்ததாகவும் கூறிய எடியூரப்பா, இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

அரியானாவில் குறிப்பிட்ட பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட பட்டாசுகளை இருப்பு வைத்திருப்பது, விற்பனை செய்வது சட்டவிரோதம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News