செய்திகள்
சித்தராமையா

கர்நாடகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியது சரியல்ல: சித்தராமையா

Published On 2020-11-06 01:37 GMT   |   Update On 2020-11-06 01:37 GMT
கொரோனா நெருக்கடி நேரத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியது சரியல்ல. கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியுள்ளார்.
சித்ரதுர்கா :

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா சித்ரதுர்காவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கொலை வழக்கு ஒன்றில் எங்கள் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி வினய்குல்கர்னியை சி.பி.ஐ. போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நான் பேசினேன். தான் எந்த தவறும் செய்யவில்லை என்று என்னிடம் அவர் கூறினார். தற்போது விசாரணை நடைபெற்று வருவதால் அதுபற்றி நான் ஒன்றும் கருத்து கூற முடியாது. கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை கிராம பஞ்சாயத்து தேர்தலை நடத்துவது, பள்ளிகளை திறப்பது நல்லதல்ல. இந்த ஆண்டு அனைத்து மாணவர்களையும் அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி செய்ய வேண்டும்.

கொரோனா நெருக்கடி நேரத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியது சரியல்ல. கர்நாடகத்தில் 2 முதல்-மந்திரிகள் உள்ளனர். ஒருவர் எடியூரப்பா. இன்னொருவர் அவரது மகன் விஜயேந்திரா. மாநிலத்தின் நிதிநிலை மிக மோசமான நிலையில் உள்ளது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே நிதி இல்லை. பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் ஒரு பக்குவமற்ற அரசியல்வாதி. அவரை பற்றி பேச விரும்பவில்லை.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Tags:    

Similar News