செய்திகள்
பட்டாசு

ராஜஸ்தான், மேற்கு வங்கத்தை தொடர்ந்து மேலும் ஒரு மாநிலத்தில் பட்டாசுக்கு தடை

Published On 2020-11-04 16:31 GMT   |   Update On 2020-11-04 16:31 GMT
ராஜஸ்தான், மேற்கு வங்காளத்தில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு மாநிலமும் தடை விதித்துள்ளது.
கேங்டாக்:

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி வருகிற 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் பட்டாசு வெடித்து அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். இந்தப் பண்டிகைக் காலத்திலும் பட்டாசு வெடிக்கக் கூடாது என சில மாநிலங்கள் தடை விதித்துள்ளது பட்டாசு தொழிலாளர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

ஏற்கனவே ராஜஸ்தான், மேற்கு வங்காளத்தில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், சிக்கிம் மாநிலத்திலும் தடை விதித்துள்ளனர். வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சில மாநிலங்கள் பட்டாசுக்கு தடை விதிப்பதால் விற்பனையாளர்கள் கடும் பாதிப்பை சந்திக்கும் நிலை உருவாகி உள்ளது.
Tags:    

Similar News