செய்திகள்
கோப்புப்படம்

10 மாநிலங்களில் இடைத்தேர்தல் - மத்திய பிரதேசத்தில் துப்பாக்கி சூடு

Published On 2020-11-04 00:43 GMT   |   Update On 2020-11-04 00:43 GMT
10 மாநிலங்களில் காலியாக உள்ள 54 சட்டசபை தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது.
புதுடெல்லி:

10 மாநிலங்களில் காலியாக உள்ள 54 சட்டசபை தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. மத்தியபிரதேசத்தில் 28 தொகுதிகளிலும், குஜராத்தில் 8 தொகுதிகளிலும், உத்தரபிரதேசத்தில் 7 தொகுதிகளிலும், கர்நாடகா, ஜார்கண்ட், நாகாலாந்து, ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா 2 தொகுதிகளிலும், சத்தீஷ்கார், தெலுங்கானா, அரியானா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடந்தது. மத்திய பிரதேசத்தில் மொரினா மாவட்டத்தில் ஒரு வாக்குச்சாவடியில் பா.ஜனதா-காங்கிரஸ் ஆதரவாளர்கள் இடையே நடந்த மோதலில் ஒரு மர்மநபர் துப்பாக்கியால் சுட்டார். இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார்.

54 தொகுதிகளிலும் மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிவடைந்தது. இதில், நாகாலாந்தில் 88.10 சதவீதம், தெலுங்கானாவில் 82.60 சதவீதம், சத்தீஷ்காரில் 71.99 சதவீதம், அரியானா, ஒடிசாவில் தலா 68 சதவீதம், மத்தியபிரதேசத்தில் 67.77 சதவீதம், ஜார்கண்டில் 62.51 சதவீதம், குஜராத்தில் 58.14 சதவீதம், கர்நாடகாவில் 51.30 சதவீதம், உத்தரபிரதேசத்தில் 52.21 சதவீதம் என வாக்குகள் பதிவானது.
Tags:    

Similar News