செய்திகள்
ராகுல் காந்தி, பிரியங்கா

வேளாண் சட்டம், பணவீக்கம் : மத்திய அரசு மீது ராகுல், பிரியங்கா தாக்கு

Published On 2020-11-03 00:51 GMT   |   Update On 2020-11-03 00:51 GMT
நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா மத்திய அரசை சாடியுள்ளார்.
புதுடெல்லி:

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து எதிர்த்து வருகிறார். அந்தவகையில் பீகார் விவசாயிகள் தங்களுக்கு அதிக சந்தை வசதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கும் செய்திகளை வெளியிட்டு நேற்றும் மத்திய அரசை தாக்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘இந்த நாட்டின் விவசாயிகள் ஒரு சந்தையை கேட்கிறார்கள். ஆனால் பிரதமரோ பயங்கர மந்தநிலையை அவர்களுக்கு அளித்துள்ளார்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதைப்போல நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் மத்திய அரசை சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘நாட்டு மக்களுக்கு பா.ஜனதாவின் தீபாவளி பரிசு: வரலாறு காணாத பணவீக்கம். ஆனால் அவர்களின் தொழிலதிபர் நண்பர்களுக்கு, 6 விமான நிலையங்கள். முதலாளிகளுடனும், முதலாளிகளின் வளர்ச்சியை உறுதி செய்யவும் உழைக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

லக்னோ விமான நிலையம் தனியாருக்கு தாரை வார்க்கப்படும் செய்தியை சுட்டிக்காட்டி இவ்வாறு அவர் கூறியிருந்தார். மேலும் உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை குறித்தும் அவர் மத்திய அரசை குற்றம் சாட்டி இருந்தார்.
Tags:    

Similar News