செய்திகள்
ஹர்ஷவர்தன்

சர்வதேச அளவில் திறமையை நிரூபித்த இந்திய விஞ்ஞானிகள் - ஹர்ஷவர்தன் பாராட்டு

Published On 2020-11-02 21:56 GMT   |   Update On 2020-11-02 21:56 GMT
இந்திய விஞ்ஞானிகள் சர்வதேச அளவில் தங்கள் திறமையை நிரூபித்து இருப்பதாக ஹர்ஷவர்தன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்திய விஞ்ஞானிகள் சர்வதேச அளவில் தங்கள் திறமையை நிரூபித்து இருப்பதாக ஹர்ஷவர்தன் பாராட்டு தெரிவித்துள்ளார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் பொன்விழாவையொட்டி, டெல்லியில் நேற்று சிறப்பு தபால்உறை வெளியிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

விஞ்ஞானத்தின் பல்வேறு துறைகளில் 80-க்கு மேற்பட்ட நாடுகளுடன் இந்தியா கூட்டு சேர்ந்து செயல்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் விஞ்ஞானத்தின் அனைத்து பிரிவுகளிலும் நமது விஞ்ஞானிகள் தங்கள் திறமையை நிரூபித்து உள்ளனர். செயற்கை நுண்ணறிவு, நானோ தொழில்நுட்பம், டேட்டா அனாலிடிக்ஸ், விண்வெளி அறிவியல், வானியல் என எந்த துறையாக இருந்தாலும் தங்கள் திறமையை நிரூபித்து உள்ளனர். தற்போதைய கொரோனா தாக்குதல் போன்ற எதிர்மறையான சூழ்நிலைகளிலும் விஞ்ஞானிகள் ஓய்வின்றி பாடுபட்டு வருகிறார்கள். புதிய சாதனைகள் படைத்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய கல்வித்துறை இணை மந்திரி சஞ்சய் தோட்ரேவும் கலந்து கொண்டார்.
Tags:    

Similar News