செய்திகள்
ராணுவ டாக்டர்கள் சாதனை

லடாக் எல்லையில் 16,000 அடி உயரத்தில், உறையும் பனியில் வீரருக்கு அறுவை சிகிச்சை - ராணுவ டாக்டர்கள் சாதனை

Published On 2020-11-02 20:33 GMT   |   Update On 2020-11-02 20:33 GMT
லடாக் எல்லையில் தரைமட்டத்தில் இருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில், உறையும் பனியில் ராணுவ வீரருக்கு அறுவை சிகிச்சை செய்து ராணுவ டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
லடாக்:

கிழக்கு லடாக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவருக்கு, குடல்வால்வு வீக்கம் காரணமாக திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆனால் மோசமான வானிலை காரணமாக அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. நிலைமையை உணர்ந்த ராணுவ டாக்டர்கள் அந்த ராணுவ வீரருக்கு அங்கேயே அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.

ஆனால் தரைமட்டத்தில் இருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில், உறையும் பனியில் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்வது அவர்களுக்கு பெரும் சவாலாக அமைந்தது.

எனினும் ராணுவ டாக்டர்கள் அந்த வீரரின் குடல் வால்வை அகற்றி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தனர். தற்போது அந்த வீரரின் உடல்நிலை சீராக இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

நாட்டின் எல்லை பகுதியில் மிகவும் மோசமான தட்பவெப்பநிலையில், ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் உடல்நல குறைவின் போது, அவர்களை வேறு இடத்துக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில், இந்திய ராணுவத்தின் டாக்டர்கள் இது போன்ற சிக்கலான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்கிறார்கள்.

எனினும் 16 ஆயிரம் அடி உயரத்தில், உறையும் பனியில் இந்த அறுவை சிகிச்சையை செய்தது மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News