செய்திகள்
கோப்புப்படம்

ராஜஸ்தானில் முக கவசம் அணிவது கட்டாயம் - சட்டசபையில் மசோதா அறிமுகம்

Published On 2020-10-31 19:49 GMT   |   Update On 2020-10-31 19:49 GMT
ராஜஸ்தானில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அனைவரும் முக கவசம் அணிவதை கட்டாயம் ஆக்கும் மசோதா சட்டசபையில் அறிமுகம் செய்யப்பட்டது
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அனைவரும் முக கவசம் அணிவதை கட்டாயம் ஆக்கும் மசோதா நேற்று அந்த மாநில சட்டசபையில் அறிமுகம் செய்யப்பட்டது.ராஜஸ்தான் தொற்று நோய்கள் (திருத்தம்) மசோதா 2020-ஐ மாநில சட்டமன்ற விவகாரங்கள் துறை மந்திரி சாந்தி தாரிவால் அறிமுகம் செய்து வைத்தார்.

ராஜஸ்தான் தொற்றுநோய்கள் சட்டம், 2020-ன் பிரிவு 4-ல் ஒரு பிரிவு புதிதாக சேர்க்கப்படுகிறது. இந்தப் பிரிவு, பொது இடங்களில் அனைவரும் வாயையும், மூக்கையும் முக கவசம் கொண்டு மூடியிருப்பதை கட்டாயம் ஆக்குகிறது.

இந்த மசோதா சட்டமானதும் பொது இடங்கள், பணி இடங்கள், பொது கூடுகைகள், போக்குவரத்து சாதனங்களில் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயம் ஆகி விடும்.
Tags:    

Similar News