செய்திகள்
கோப்புப்படம்

மருத்துவ கல்லூரிகள் தொடங்க புதிய விதிமுறை - தேசிய மருத்துவ கமிஷன் அறிவிப்பு

Published On 2020-10-31 19:06 GMT   |   Update On 2020-10-31 19:06 GMT
மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கான புதிய விதிமுறைகளை, புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய மருத்துவ கமிஷன் (என்.எம்.சி.) அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கான புதிய விதிமுறைகளை, புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய மருத்துவ கமிஷன் (என்.எம்.சி.) அறிவித்துள்ளது.

இதன்படி, மருத்துவ கல்லூரியையும், அதனுடன் இணைந்த ஆஸ்பத்திரியையும் அமைக்க குறைந்தது 5 ஏக்கர் நிலம் வேண்டும் என்ற விதி நீக்கப்படுகிறது.

அதே நேரத்தில் திறன் ஆய்வுக்கூடங்கள் (ஸ்கில்ஸ் லேப்) கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அங்கு மாணவர்கள் பாடத்திட்டத்தில் முன் குறிப்பிடப்பட்ட திறன்களைப் பயிற்சி செய்யலாம் அல்லது மேம்படுத்தலாம். திறன் ஆய்வுக்கூடங்களின் நோக்கம், மாணவர்கள் ஒரு உருவகப்படுத்தப்பட்ட சூழலில் திறன்களை கற்கவும், பயிற்சி பெறவும், கவனிக்கவும், ஒரு பாதுகாப்பான மற்றும் அச்சுறுத்தல் இல்லாத சூழலை வழங்குவதாகும் என கூறப்பட்டுள்ளது.

மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளில் 530 படுக்கை வசதிகள் இருக்க வேண்டும் என்பது 430 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடனான கல்லூரிகளுக்கானது.

200 இடங்களுடனான மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளில் 930 படுக்கை வசதி என்பது 830 ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது.

இது போன்று பல விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News