செய்திகள்
மத்திய நிதித்துறை அலுவலகம்

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு -அறிவிப்பை வெளியிட்டது மத்திய நிதியமைச்சகம்

Published On 2020-10-31 07:25 GMT   |   Update On 2020-10-31 07:25 GMT
தனிநபர் வரி செலுத்துவோர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:

ஆண்டுக்கு, ரூ.2.5 லட்சம் வருமானம் என்ற உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமானவரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் என்பது, 2018-ம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது.

2019-20 நிதியாண்டிற்கு அபராதம் செலுத்தி, கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், மார்ச் 31-ந் தேதி உடன் முடிவடைந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக, அக்டோபர் 31-ம் தேதி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்பின்னர்  தனிநபர் வரி செலுத்துவோர் வருமானத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்படுவதாக கடந்த 24ம் தேதி மத்திய நிதி அமைச்சகம் அறிவித்தது. கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டிய வரி செலுத்துவோருக்கு, வருமான வரி வருமானம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 2021 ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த காலக்கெடு நீட்டிப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
Tags:    

Similar News