செய்திகள்
சந்திரகாந்த் பாட்டீல்

சரத்பவார் தான் ஆட்சியை நடத்துகிறார்: சந்திரகாந்த் பாட்டீல்

Published On 2020-10-31 02:31 GMT   |   Update On 2020-10-31 02:31 GMT
மகாராஷ்டிராவில் ஆட்சியை சரத்பவார் தான் நடத்துகிறார், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்திப்பதில் பலன் இல்லை என மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.
மும்பை :

கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்களிடம் அதிக மின் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே நேற்று முன்தினம் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார்.

அப்போது கவர்னர் இந்த விவகாரம் தொடர்பாக சரத்பவாரை சந்திக்குமாறு ராஜ் தாக்கரேயிடம் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீலிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

கவர்னர் என்ன கூறினார் என எனக்கு தெரியாது. ஆனால் என்னிடம் கேட்டால், சரத்பவார் தான் மாநிலத்தை நடத்துகிறார் என கூறுவேன். உத்தவ் தாக்கரேயை சந்திப்பதால் என்ன பலன்?. சரத்பவார், தேவேந்திர பட்னாவிசை எளிதில் சந்திக்க முடியும். எனவே மக்கள் முதல்-மந்திரியை ஏன் சந்திக்க வேண்டும் என நினைக்கின்றனர்.

கடந்த 9 மாதங்களாக முதல்-மந்திரிக்கு பல கடிதங்கள் எழுதி உள்ளேன். அதில் ஒன்றுக்கு கூட பதில் வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News