செய்திகள்
விலங்கியல் பூங்காவை தொடங்கி வைத்த மோடி

சர்தார் படேல் விலங்கியல் பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டார் பிரதமர் மோடி

Published On 2020-10-30 11:50 GMT   |   Update On 2020-10-30 20:21 GMT
குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி கெவாடியாவில் உள்ள சர்தார் படேல் விலங்கியல் பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார். முன்னாள் குஜராத் முதலமைச்சர் கேஷுபாய் படேல் நோய் காரணமாகக் காலமானார். அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதன்பின் நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியாக்கு சென்றார். கெவாடியாவில் சர்தார் படேல் விலங்கியல் பூங்கைவை திறந்து வைத்து, பார்வையிட்டார்.

நாளை சர்தர் வல்லபாய் படேல் பிறந்தநாள் நினைவாக ஒற்றுமையின் சின்னமான சிலைக்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தவுள்ளார். அந்த விழாவில், மத்திய ஆயுத காவல் படைகள் (CAPF) மற்றும் குஜராத் காவல்துறை இணைந்து ஏக்தா திவாஸ் பரேட் என்ற அணிவகுப்பு நடக்கவுள்ளது.

அணிவகுப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய பின்பு பிரதமர், சிவில் சர்வீஸ் வீரர்களுடன் வீடியோ கான்பெரென்ஸ் மூலம் பிரதமர் உரையாட உள்ளார். பின்னர் மதியம், கெவாடியா மற்றும் அகமதாபாத்தை இணைக்கும் சீப்ளேன் சேவையைத் திறந்து வைக்கவுள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து அவர் டெல்லிக்குப் புறப்படுகிறார்.
Tags:    

Similar News