செய்திகள்
கோப்புப்படம்

மனைவியை தாக்கிய ஐ.பி.எஸ். அதிகாரி பணியிடை நீக்கம் - மத்திய அரசு நடவடிக்கை

Published On 2020-10-29 22:23 GMT   |   Update On 2020-10-29 22:23 GMT
மத்திய பிரதேசத்தில் மனைவியை தாக்கிய ஐ.பி.எஸ். அதிகாரியை பணியிடை நீக்க நடவடிக்கையை உறுதி செய்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
போபால்:

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி புருஷோத்தம் சர்மா. இவர் சிறப்பு டி.ஜி.பி. பதவி வகித்து வந்தார். கடந்த மாதம் இவர் தனது மனைவியை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையதளத்தில் பரவி வைரலானது.

இதுபற்றி அவர் மீது குற்றப்பத்திரிகை தயாரிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய பிரதேச தலைமை செயலாளருக்கு, கடிதம் அனுப்பியது. இதையடுத்து புருஷோத்தம் சர்மா அவர் வகித்து வந்த சிறப்பு டி.ஜி.பி. பதவியில் இருந்து பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டார்.

இதுகுறித்து தான் கோர்ட்டில் முறையிடுவேன் என்று அவர் கூறியிருந்தார். மேலும் மாநில தலைமைச் செயலகத்துக்கும், மத்திய நிர்வாக தீர்ப்பாயத்திற்கும் தனது பணியிடை நீக்க நடவடிக்கையை ரத்து செய்யும்படி கடிதம் அனுப்பியிருந்தார். அவரது கோரிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவரது பணியிடை நீக்க நடவடிக்கையை உறுதி செய்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News