செய்திகள்
கோப்புப்படம்

பலி ஏற்படாத ஒரே மாநிலமாக இருந்த மிசோரமில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு

Published On 2020-10-28 19:41 GMT   |   Update On 2020-10-28 19:41 GMT
கொரோனா உயிர்ப்பலி ஏற்படாத ஒரே மாநிலமாக இருந்த மிசோரமில் முதல்முறையாக கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
அய்ஸ்வால்:

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் கடந்த மார்ச் 24-ந்தேதி, முதல்முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை 2 ஆயிரத்து 607 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நல்லவேளையாக, அங்கு யாரும் கொரோனாவால் உயிரிழந்தது இல்லை. இந்தியாவில், கொரோனா உயிர்ப்பலி ஏற்படாத ஒரே மாநிலமாக மிசோரம் இருந்து வந்தது.

இந்த நிலையில், நேற்று அங்கு முதல்முறையாக கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தலைநகர் அய்ஸ்வால் அருகே அரசுக்கு சொந்தமான சோரம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 62 வயதான ஒருவர் கொரோனாவுக்கு பலியானார்.அவர் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இதய கோளாறும் இருந்து வந்தது.
Tags:    

Similar News