செய்திகள்
எப்18 விமானம்

இந்தியாவுக்கு எப்-18 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு

Published On 2020-10-28 08:04 GMT   |   Update On 2020-10-28 08:04 GMT
இந்திய கடற்படைக்கு எப்-18 ரக போர் விமானங்கள் மற்றும் நவீன ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் சமீபத்தில் மந்திரிகள் அளவிலான பேச்சுவார்தை நடைபெற்றது. இதில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

இந்நிலையில் இந்திய கடற்படையின் பயன்பாட்டிற்காக எப்-18 ரக போர் விமானங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளது. சீ கார்டியன் ரக ஆளில்லா விமானங்கள் உள்பட நவீன ஆயுதங்களையும் விற்க முன்வந்துள்ளது.

சமீபத்தில் 2+2 பேச்சுவார்த்தையின்போது இரு நாடுகளின் பாதுகாப்புத் துறை பிரதிநிதிகள் முன்மொழிந்த திட்டமிட்டபடி, அமெரிக்க அரசு தங்கள் கடற்படை போர் விமானமான எப் -18ஐ இந்திய கடற்படைக்கு வழங்க முன்வந்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா மற்றும் தற்போது கட்டப்பட்டு வரும் விமானந்தாங்கி கப்பலில் இருந்து தாக்குதல்களுக்கு பயன்படுத்துவதற்காக 57 போர் விமானங்களை கையகப்படுத்த இந்திய கடற்படை சில ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News