செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

சிவராஜ் சிங்கிற்கு எதிரான போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ

Published On 2020-10-28 04:53 GMT   |   Update On 2020-10-28 04:53 GMT
இடைத்தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், சிவராஜ் சிங்கிற்கு எதிரான போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக வீடியோ வைரலாகி வருகிறது.


மத்திய பிரதேசத்தில் மொத்தம் 28 தொகுதிகளுக்கு நவம்பர் 3 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிராசர பரபரப்புக்கு இடையே முதல்வர் சிவராஜ் சிங் சௌகானுக்கு எதிரான போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோவில் எம்பி டாக் மற்றும் மொபைல் டாக் லோகோ இடம்பெற்று இருக்கின்றன. மேலும் இந்த வீடியோ சத்னாவில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டு இருக்கிறது.

உண்மையில் இது முதல்வருக்கு எதிரான போராட்டத்தில் எடுக்கப்பட்டதா என ஆய்வு செய்ததில், அந்த வீடியோ இரண்டு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. உண்மையில் இது 2018 ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநில அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஆகும். 



இந்த வீடியோ 2018 ஆம் ஆண்டு தினக்கூலி விவகாரம் தொடர்பாக ஆஷா பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்டது ஆகும். அந்த வகையில் இந்த வீடியோ சிவராஜ் சிங்கிற்கு எதிரான போராட்டத்தில் எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News