செய்திகள்
இருநாட்டு மந்திரிகள் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பு

இந்தியா-அமெரிக்கா இடையே அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு உள்பட 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

Published On 2020-10-27 09:29 GMT   |   Update On 2020-10-28 06:56 GMT
இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அடிப்படை தகவல் பரிமாற்றம் ஒத்துழைப்பு உள்பட 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
புதுடெல்லி:

இந்திய, அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரிகள் இடையே கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நேரடி பேச்சுவார்த்தை (2+2 பேச்சுவார்த்தை) நடந்து வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான 2+2 பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று நடைபெற்றது.

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ, பாதுகாப்புத்துறை மந்திரி மார்க் எஸ்பெர்க் உடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூட்டாக ஆலோசனை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின், இந்தியா - அமெரிக்கா இடையே அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு உள்பட 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 

அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளும் இடையே ராணுவ ரீதியிலான பல்வேறு தகவல்கள், நடவடிக்கைகளை, தொழில்நுட்ப தகவல்களை பகிர சம்பதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக அமெரிக்க ராணுவ தரவுகளை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் சீனா,பாகிஸ்தான்  நாடுகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க இந்தியாவுக்கு உதவியாக இருக்கும். இரு நாட்டு வரைபட தரவுகளையும் பகிர்ந்து கொள்ள சம்பதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரு நாடுகளுக்கு இடையே ராணுவ ஒப்பந்தங்கள், ராணுவ உபகரணங்கள் வழங்குதல், இரு நாடுகளும் இணைந்து ராணுவ, கடல்பரப்பு, வான் பரப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இணைந்து செயல்படுதல் மற்றும் அது தொடர்பான தகவல்களை பகிர்தல் என பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தங்கள் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதில் பெரும் பங்காற்றும் என தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News