செய்திகள்
2+2 பேச்சுவார்த்தை தொடக்கம்

இந்தியா - அமெரிக்கா இடையேயான 2+2 பேச்சுவார்த்தை தொடக்கம்

Published On 2020-10-27 05:15 GMT   |   Update On 2020-10-27 05:15 GMT
இந்தியா - அமெரிக்கா இடையே வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை மட்டத்திலான 2+2 பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
புதுடெல்லி:

இந்திய, அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரிகள் இடையே கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நேரடி பேச்சுவார்த்தை (2+2 பேச்சுவார்த்தை) நடந்து வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான 2+2 பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று தொடங்கியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ, பாதுகாப்புத்துறை மந்திரி மைக் பாம்பியோவுடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூட்டாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் இரு நாட்டு பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறையின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையில் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு, ராணுவ தகவல் பகிர்வு, ராணுவ தொடர்புகள் மற்றும் பாதுகாப்பு வர்த்தகம், ஆயுத விற்பனை, உள்ளிட்ட முக்கிய அம்சங்களில் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவுடன் இரு நாடுகளுக்கும் மோதல் அதிகரித்துள்ள நிலையில் தென் சீன கடல் விவகாரம் இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய அம்சமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News