செய்திகள்
மோதலின்போது உடைந்த நாற்காலிகள்

தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ்-பாஜக தொண்டர்கள் கடும் மோதல்

Published On 2020-10-26 03:45 GMT   |   Update On 2020-10-26 03:45 GMT
மத்திய பிரதேசத்தில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தப்ரா:

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டம் தப்ரா நகரில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே நேற்று இரவு கடுமையான மோதல் ஏற்பட்டது. நாற்காலிகளை தூக்கி வீசினர். இதில் பல நாற்காலிகள் உடைந்தன. இந்த மோதலில் சிலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

மோதல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சுரேஷ் ராஜே, பாஜக தொண்டர் மோகன் சிங் ஆகியோர் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளில் வரும் நவம்பர் 3ம்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10ம் தேதி நடைபெறுகிறது. 
Tags:    

Similar News