செய்திகள்
சிராக் பாஸ்வான்

லோக் ஜனசக்தி ஆட்சிக்கு வந்தால் நிதிஷ்குமார் சிறையிலடைக்கப்படுவார் - சிராக் பாஸ்வான்

Published On 2020-10-25 19:38 GMT   |   Update On 2020-10-25 19:38 GMT
பீகார் தேர்தலில் தங்களின் லோக் ஜனசக்தி கட்சி ஆட்சிக்கு வந்தால் தற்போதைய முதல் மந்திரி நிதிஷ்குமார் சிறையில் அடைக்கப்படுவார் என்று சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
பாட்னா:

கொரோனா தொற்றுநோய் காலகட்டத்தில் இந்தியாவில் நடைபெறும் முதல் தேர்தல் பீகார் சட்டசபைத் தேர்தல் ஆகும். அக்டோபர் 28 முதல் நவம்பர் 7 வரை நடைபெறவிருக்கும் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (என்.டி.ஏ) பிரதான எதிர்க்கட்சியான மகாகத்பந்தனுக்கும் (எம்ஜிபி) நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் நிதிஷ்குமார் தலைமையிலான அணி மீண்டும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளன. நிதிஷ்குமார் செல்வாக்கு சரிந்திருப்பதாகவும், அதே நேரத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்திருப்பதால் அவருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், புக்சாரில் தும்ரவானில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட சிராக் பாஸ்வான் பேசியதாவது:

பீகார் தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி ஆட்சிக்கு வந்தால் தற்போதைய முதல் மந்திரி நிதிஷ்குமார் சிறையில் அடைக்கப்படுவார் 

இங்கு மதுபானத் தடை தோல்வியடைந்து விட்டது. கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்கப்படுகின்றன, கள்ளச் சாராயம் விற்கப்படுகிறது, நிதிஷ்குமாருக்கு இதன்மூலம் நல்ல வருவாய் லஞ்சமாகக் கிட்டுகிறது.

நிதிஷ் இல்லாத அரசை உருவாக்க விரும்புகிறோம். பீகார் முதன்மை மாநிலமாக வரவேண்டும் எனில் லோக் ஜனசக்தி வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.

லோக் ஜனசக்தி வேட்பாளர் நிற்காத இடத்தில் பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள். வரும் அரசு நிதிஷ் இல்லாத அரசு, என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News