செய்திகள்
சக்திகாந்த தாஸ்

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா தொற்று

Published On 2020-10-25 14:34 GMT   |   Update On 2020-10-25 14:34 GMT
தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. இந்தியாவில் கடந்த மார்ச் மாத இறுதி முதல் கொரோனா வைரஸ் வீரியம் காட்ட துவங்கியது. இதனையடுத்து மத்திய அரசு பல்வேறு கட்டங்களாக தடை உத்தரவு பிறப்பித்தது.

இருப்பினும் மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்திலும் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னராக இருக்கும் சக்திகாந்த தாஸ், தன்னுடைய டுவிட்டரில் பக்கத்தில் ‘‘நான் கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். அறிகுறி தென்பட்டுள்ளது. தற்போது நல்ல உடல் ஆரோக்கியமாக இருக்கிறேன். இருப்பினும் தனிமைப்படுத்தி கொண்டேன்.

சமீபகாலங்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வங்கியின் துணை கவர்னர்கள், அதிகாரிகளுடன் வீடியோ கான்பரசின்சிங், மற்றும் தொலைபேசி மூலம் தொடர்புகொள்வேன். வழக்கம்போல் வங்கி பணிகள் நடைபெறும்’’ எனப் பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News