செய்திகள்
பிரதமர் மோடி

புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு கூடுதல் ஆதாயம் -பிரதமர் மோடி

Published On 2020-10-25 07:05 GMT   |   Update On 2020-10-25 07:05 GMT
மகாராஷ்டிராவில் மக்காச்சோள விவசாயிகளுக்கு அவர்களின் பயிர்களுக்கு உரிய விலையைத் தவிர போனசும் கிடைத்துள்ளதாக பிரதமர் மோடி பேசினார்.
புதுடெல்லி:

மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

புதிய வேளாண் சட்டங்கள் மூலம் நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் பயனடைகின்றனர். பல தனியார் நிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்கின்றன. மகாராஷ்டிராவில் மக்காச்சோள விவசாயிகளுக்கு அவர்களின் பயிர்களுக்கு உரிய விலையைத் தவிர போனசும் கிடைத்துள்ளது. பயிர்களை கொள்முதல் செய்த நிறுவனம் போனஸ் வழங்கியிருக்கிறது. 

மத்திய அரசு உருவாக்கி உள்ள புதிய வேளாண் சட்டங்களின் மூலம், இப்போது விவசாயிகள், இந்தியாவில் எங்கும் பயிர்களை விற்க முடிகிறது. கொள்முதல் நிறுவனங்களுக்கு கிடைக்கும் கூடுதல் லாபத்தை விவசாயிகளுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் நினைத்து போனஸ் வழங்கி உள்ளனர்.  

இந்த போனஸ் தொகை இப்போது சிறியதாக இருக்கலாம், ஆனால் இதன் தொடக்கமானது மிகப்பெரியது. புதிய வேளாண் சட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு அடிமட்டத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் சாத்தியமாகும் என்பதை இது காட்டுகிறது. விவசாயிகள் தொழிநுட்பங்கள் மூலம் புதிய வியாபார வாய்ப்புகளை உருவாக்கலாம்.

நாடு முழுவதும் வழிபாட்டு தலங்களை நிறுவி அவற்றை மேன்மையடைய செய்தவர் சங்கராச்சாரியார். தனது பக்தி மற்றும் வழிபாட்டின் மூலம் நாட்டை ஒன்றுபடுத்தியவர்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Tags:    

Similar News