செய்திகள்
கிசான் சூர்யோதயா திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி

குஜராத்தில் கிசான் சூர்யோதயா உள்ளிட்ட 3 திட்டங்களை துவக்கி வைத்தார் மோடி

Published On 2020-10-24 06:11 GMT   |   Update On 2020-10-24 06:11 GMT
குஜராத் மாநிலத்தில் விவசாயிகளுக்கான கிசான் சூர்யோதயா திட்டம் உள்ளிட்ட 3 திட்டங்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார்.
புதுடெல்லி:

குஜராத் மாநிலத்தில் விவசாயிகளுக்கு பகல் நேரத்தில் பாசனத்திற்கு மின்சாரம் வழங்கும் வகையில் 'கிசான் சூர்யோதயா யோஜனா' என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல் கிர்னாரில் 2.3 கிமீ நீள ரோப்வே திட்டப்பணிகளும் நிறைவடைந்துள்ளன. யுஎன் மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில், குழந்தைகள் இருதய மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 

இந்த மூன்று முக்கிய திட்டங்களையும் பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்தபடி காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதி தலைவர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

கிசான் சூர்யோதயா யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு காலை 5 மணி முதல் 9 மணி வரை மின்சார விநியோகம் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் 2023-ம் ஆண்டுக்குள் மின் விநியோக உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக ரூ. 3,500 கோடி நிதியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News