செய்திகள்
ஆயுத தொழிற்சாலை

ஹத்ராசில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை கண்டுபிடித்து அழிப்பு

Published On 2020-10-23 00:53 GMT   |   Update On 2020-10-23 00:53 GMT
உத்தரபிரதேசத்தின் ஹத்ராசில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டதில் துப்பாக்கிகளும், தோட்டாக்களும், பயங்கர வெடிபொருட்களும் சிக்கின.
ஹத்ராஸ்:

உத்தரபிரதேசத்தின் ஹத்ராசில் உள்ள ஜலிசர் சாலையில் சட்டவிரோதமாக ஆயுத தொழிற்சாலை இயங்குவதாக தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர். அந்த தொழிற்சாலையில் துப்பாக்கி மற்றும் பயங்கர வெடிபொருட்கள் சட்டவிரோதமாக தயாரிக்கப்படுவது தெரியவந்தது.

அங்கிருந்து துப்பாக்கிகளும், தோட்டாக்களும், பயங்கர வெடிபொருட்களும் சிக்கின. இவற்றை கைப்பற்றிய போலீசார் தொழிற்சாலையை அழித்தனர். மேலும் அங்கு இருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பிடிபட்டவரின் பெயர் காஞ்சன் என்பதும், அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த ஆயுத தொழிற்சாலையில் இருந்து பயங்கரவாதிகள் யாருக்காவது ஆயுதங்கள் சப்ளை செய்யப்பட்டதா? என்று விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News