செய்திகள்
சரணடைந்த இளைஞர்கள்

காஷ்மீர்: பயங்கரவாத அமைப்பில் புதிதாக இணைந்த 2 இளைஞர்கள் பாதுகாப்பு படையினரிடம் சரண்

Published On 2020-10-22 13:23 GMT   |   Update On 2020-10-22 13:23 GMT
காஷ்மீரில் வீட்டில் இருந்து வெளியேறி பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்த 2 இளைஞர்கள் பாதுகாப்புபடையினரின் தேடுதல் வேட்டையின் போது சரண் அடைந்தனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை வேட்டையாடுவதில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவல் பெருமளவில் தடுக்கப்பட்டு வரும் நிலையில் காஷ்மீரில் இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத இயக்கத்தில் சேரவைக்க பாகிஸ்தான் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில், காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் சோபூர் நகரை சேர்ந்த மிரஜூதின் (20), அபித் (21) என்ற இரண்டு இளைஞர்கள் சமீபத்தில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்தனர். 

இந்நிலையில், சோபூரில் உள்ள துஜ்ஜார் பகுதியில் இன்று சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை சுற்றிவளைத்த
பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அப்பகுதியில் பதுங்கி இருப்பது பயங்கரவாத இயக்கத்தில் புதிதாக இணைந்த மிரஜூதின், அபித் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த இரண்டு இளைஞர்களின் பெற்றோரின் உதவியுடன் சரணடையவைக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.

பயங்கரவாதிகளின் பெற்றோரின் உதவியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அந்த இரண்டு இளைஞர்களும் பாதுகாப்ப் படையினரிடம் சரணடைந்தனர். சரணடைந்த இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டப்பின் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். 
Tags:    

Similar News